திருச்சிற்றம்பலம்!!
வீரசோழ விநாயகர் காப்பு!!
ஸ்ரீ பெரியநாயகி அம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் துணை!!
தரணிபுகழ் தருமநெறி தோட குலத்தோர்
கீர்த்தி பாட
தந்திமா முகத்து வீரசோழ விநாயகனே
தயை செய்வாய்.
தோடன் குலம் கொங்கு வெள்ளாளரில் உள்ள மிக தொன்மையான குலம். தோட என்பதற்கு ஒர் ஆழியில் மூச்சடைத்து எடுக்கும் முத்து என்றும் பொருளுள்ளது. பலரும் காதினில் தோடு என்ற ஆபரணம் அணிவதால் வந்த பெயர் என்று தவறாக எழுதிவந்தனர். சித்தன்னவாசல் என்னும பகுதியில் கண்டறியபட்ட தொல்கல்வெட்டு ஒன்றில் " தோடன் " என்ற பெயர் உள்ளது. இதுவரை கொடுமணலில் கிடைக்க பெற்றதும் பழைய ஆவணங்களில் கிடைத்ததும் ஆன குலபெயர்கள் பதின்மூன்றில் தோடன் குலமும் ஒன்று என்பது சிறப்பு.
இன்று கொங்க வெள்ளாளரில் தோடை குலம் என்று அறியபடும் இவர்கள், சங்க காலத்தில் வேள் / வேளீர் மரபை சார்ந்தவர்கள். இவர்கள் குடகொங்கு நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். காங்கைய நாட்டின் பாப்பினி காணிக்குரிய முதல் காணியாளர்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்ன வாசலில் கிடைத்த கல்வெட்டு
தோடை என்பது மறுவு பெயர். இதுவரை கிடைக்க பெற்ற கல்வெட்டுகளில் தோடன், தோட என்றே குறிக்க பட்டனர். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தோடை என்று மறுவியது. எனினும் தோட என்று 1982ம் ஆண்டு கல்வெட்டுகள் குறிக்கபட்டுள்ளனர்.
யானை வாகனம்
தோட குலத்தவர் கொங்க 24 தேசத்துள் காங்கைய நாட்டில் தொடங்கி , கேரளா (பாலக்காடு மாவட்டம்) வரை பரவலாக வசிக்கிறார்கள். காவேரி அக்கரைக்கு கிழக்கே தோட குலத்தவர் பெரும்பாலும் இல்லை. தோட குலத்தவர் வசிப்பிடங்களை காண்கின் நொய்யல் ஆற்றின் கரைகளில் உள்ளதை காணலாம்.
ஸ்ரீ பேரூரம்மன்
தோட குலத்தவரின் பூர்வ குலதெய்வம், ஆறை நாட்டின் உப பேரூர் வளநாட்டு திருப்பேரூர் பச்சைநாயகி அம்பிகை சமேத பட்டீஸ்வர பெருமான். பாப்பினியில் காணியுரிமை பெற்ற பின் பேரூரிலிருந்து கொண்டு வந்த பச்சைநாயகி அம்மனை , பேரூர் பெரியநாயகி அம்மன் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்தனர். ஒருமுறை பாப்பினியில் இருந்த தோட குலத்தவர் ஒருவர் பேரூர் சென்று குலதெய்வத்தை வணங்கிவிட்டு திரும்ப வரும்போது கையில் வெங்கற்கல் இரண்டை எடுத்து வந்துவிடுகிறார். அதில் பச்சைநாயகி அம்மன் குடி வருகிறாள். பாப்பனி ஊருக்கு மேற்புறம் கல்லை வீசிவிட்டு வீடு சென்று உறங்க, கனவில் பச்சைநாயகி தோன்றி தாமே அக்கல்லில் குடி வந்ததை சொல்லி, கோவில் கட்ட சொல்கிறாள். அதன்படி பாப்பினி பெரியநாயகி அம்மன் கோவில் கட்ட படுகிறது என்பது அச்சேறாத வரலாறாக சொல்லபடுகிறது.
பிற்கால சோழர் காலத்தில் தோட குலத்தவர் குறுநில ஆட்சியாளராக திகழ்ந்தனர். தோட குல முதல்வன் காகுத்த நல்லான் என்பவர் , குலோத்துங்க சோழனின் நெருங்கிய நண்பர். தஞ்சையில் ஒரு நாள் குலோத்துங்க சோழன் முன்னிலையில், அரைவராகன் அளவுடைய பொற்காசுகளை தன் எடையளவு நிறுத்து தானம் தந்ததை கொங்க மண்டல சதக பாடல் புகழ்கிறது. அக்காலம் தொட்டு பெரும் தனாதிபதிகளாக தோட குலத்தவர் திகழ்ந்து வருகிறார்கள்.
அதனை விளக்கும் பாடல்,
ஆடற்பரியும் புவனங்கள் மீதினி லம்புயமுங்
கோடவிழ் தஞ்சையில் மாநகராதி குலோத்துங்கன்முன்
தோடை குலாதிபன் காகுத்த நல்லான் துரைகள்மெச்ச
மாடையும் பொன்னும் நிறைகொடுத் தான்கொங்கு மண்டலமே.
( கொங்கு மண்டல சதகம்).
குலோத்துங்க சோழன் அரசவையில் கொங்கு நாட்டைசேர்ந்த சிற்றரசர்கள் இருந்ததை அழகுமலை குறவஞ்சி சொல்கிறது.
தோட குலத்தவரில் ஒருவர் படை சேனாபதியாக திகந்தவர். அவர் மரபில் வந்த குழந்தைவேல கவுண்டர் மீதினில் காணிபாடலை புலவர் பாடியுள்ளார்.
காணிப்பாடல்:
திருவுலவு காஞ்சிபார்ப் பதிகன்னி வாடியும்
செயகாள மங்கைமுளசி
தேவகூத் தம்பூண்டி காகம் குழாநிலை
சேர்நசைய னூர்மணியனூர்
தருவுலவு கொன்னையார் மேவுகற் றான்காணி
தர்மமிகு ஓடைதகடை
தமிழ்பெற்ற மோரூரு ஆலத்தூர்ப் பட்டணம்
தங்கும் ஆனங்கூருடன்
அருளுலவு பச்சோடை நாதர்பெரி யம்மைதாள்
அனதினமும் மறவாதவர்
அன்புபெறு தோடைகுல சின்னய்ய நராதிபதி
அருள்செல்வ னேந்திரபூபன்
மருவுலவு சேனா பதிக்குரிசில் மைந்தனாம்
மன்னவன் குழந்தைவேலன்
மகராசன் எனவந்த மரபுளோர் அனைவர்க்கும்
வளமைபெற வருகாணியே!
(காணிநூல் -27)
காணியூர்கள்:-
காஞ்சிக்கோயில், பாப்பினி, கன்னிவாடி, காளமங்கலம், முளசி, கூத்தம்பூண்டி, காகம், கொளாநல்லி, நசியனூர், மணியனூர், கொன்னையார், கத்தாங்கண்ணி, ஓடப்பள்ளி, தகடப்பாடி, மோரூர், ஆலத்தூர்பட்டணம், ஆனங்கூர் ஆகியவை தோடைக்குலக் காணியூர்கள்.
ஒட்டஞ்சத்திரம் பகுதியில் வசிக்கும் தோட குலத்தவர் பேரூர் அம்மன் என்ற பெயரில் குடிகோவில்களை ஆங்காங்கே கட்டிகொண்டனர். தலைகட்டு பொங்கல் வைக்கவும், ஆண்டுக்கு ஒருமுறை பாப்பினி ஆருத்ர கபாலீஸ்வரர், பெரியநாயகி அம்பிகையை தரிசிக்க வந்து செல்கிறார்கள்.
குறுப்பு நாட்டில் வசித்து வந்த தோட குலத்தவர்கள் பாப்பினி பெரியநாயகி அம்மனை தரிசிக்க மாட்டு வண்டி பூட்டி வரும் போது இளைப்பாற நின்ற இடத்தில் இறக்கி வைத்த பொருள்களை எடுக்க முடியாமல் போக, பெரியநாயகி அம்மன் அங்கே குடி வந்ததை உணர்த்தினாள். செங்கப்பள்ளி அருகே சாமியார்பாளையத்தில் பெரியநாயகி அம்மனுக்கு கோவில் அமைத்து அங்கேயே சிலர் நின்றனர்.
ஈஞ்சகுலத்துக்கு போரில் உதவிய முறையில் ஈஞ்சகுலத்தாரின் குலதெய்வத்தை ஏற்று சிலர் நின்றனர்.
தோட குலத்தவர் கன்ன / கன்னந்தை குலத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். தோட குலத்தவர், கன்ன குலத்தவர், கன்னந்தை குலத்தவர் காணிபாடல்களை ஒப்பிட்டு பார்த்தால் இதை காணலாம். தோட கன்னந்தை குலம் இரண்டையும் சேர்த்து ஒரே காணிபாடலில் பாடியது வேறெங்கும் கிடையாது.
பெருந்துறை அருகே சின்னாத்தாளை தோடகுலத்தார் சிலர் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
தோட குலத்தவர் சிவன்மலை கந்தன் மீதினில் அதீத பக்தி உடையவர்கள். பாப்பினி மடவளாக இலக்குமண பாரதி பண்டித குருசுவாமிகள் இயற்றுவித்த சிவன்மலை குறவஞ்சியில், காங்கைய நாட்டாரான தோட குல செல்லய்யன், பெரியணன், முத்தய்யன், பொன்னய்யன் ஆகியோர் செய்த திருப்பணி குறிக்கபடுகிறது.
சிவன்மலை குறவஞ்சி
சிவன்மலை குறவஞ்சி நூல் நீதி செல்லய்யன் என்று தோட குலத்தவர் நீதிநெறி தவறாமல் கடைபிடித்ததை உணர்ந்துகிறது.
தோட குலத்தவர் யானை வாகனத்தை பாப்பினி பெரியநாயகி அம்மன் கோவிலில் எழுப்பியிருந்தனர்.
யானை அசுவ வாகனம்
விஜயநகர பேரரசு காலத்தில் காங்கைய நாடு ஐந்து மண்டலமாக பிரித்து நிர்வகிக்க பட்டது. அதில் பாப்பினி வளநாடு ( காங்கேயம் - முத்தூர் சாலைக்கு வடக்கே ) தோட குலத்தவர் நிர்வாகத்துக்கு உட்பட்டது. வீரசோழ வளநாடு பாப்பினி கன்னந்தை குலத்தவர் நிர்வாகம் செய்தனர்.
பாப்பினியை சேர்ந்த தோட குல மாந்தன் கூத்தன் என்பவர், காங்கைய நாட்டு கோவில் வரிவசூல் அதிகாரியாக விஜயநகரத்தார் காலத்தில் திகழ்ந்ததை கீரனூர் விண்ணளந்த பெருமாள் கோவிலில் கிடைத்த கல்வெட்டில் காணலாம்.
கீரனூர் கல்வெட்டு
அழகுமலை குறவஞ்சி நூலில் " தரணிபுகழ் பார்ப்பதி தோடை குலதீரனை " என்று குறிப்பிடபடுகின்றனர்.
பாப்பினி பெரியநாயகி அம்மன் கோவில் மடப்பள்ளியை தோட குலத்தவர் கட்டுவித்ததை , அதில் போடப்பட்டிருந்த பலகைகல்லில் பொறித்திருந்தனர்.
குலகுருக்கள் :-
கொங்கு நாட்டு ஆதிசைவ ஆதினமான பாப்பினி ஒருநான்கு வேதாந்த பண்டித குருசுவாமிகளை குலகுருவாக கொண்டவர்கள் தோட குலத்தவர். வீரசோழன் என்னும் சோழ மன்னனிடம் தமக்கான ஆட்சியையும் , குலகுருவையும் உரிமையாக பெற்றவர்கள். சிலகாலம் முன்பு ஆதினம் பெரிய மடம், சின்ன மடம் என்று பிரிந்ததில் , பெரிய மடத்தை குலகுரு பீடமாக ஏற்றனர்.
குலகுரு பல்லக்கு பாடல்
ஈங்கூரில் காணியுடைய தோட குலத்தவர்கள் பாசூர் தீட்சிதரை குலகுருவாக ஏற்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தோட குலத்தில் பிறந்த காந்திதாசன் என்பவர் பெரியநாயகி அம்மன் மீது பெரியநாயகியமுதம் என்ற பாமலையை பாடினார்.
பெரியநாயகியமுதம் முகப்பு படம்
இந்நூல் 1987ம் ஆண்டு இயற்றபட்டது. இதில் தோடையொரு ஐந்தாயிரம் வந்து பெரியநாயகி அம்மனை பணிவதாக பாடியுள்ளார். அன்றைய காலத்தில் தோட குலத்தில் ஐந்தாயிரம் குடும்பங்கள் இருந்ததை கவிஞர் அப்படி பாடியுள்ளார்.
பெரியநாயகியமுதத்தில் ஒருபாடல்
Very good effort, I appreciate your esteemed effort, keep it up.
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி பூபாலச்சந்தர் தேடை குலம் காருமாரம்பாளையம், திருப்பூர்.
ReplyDeleteமிக அருமையான கட்டுரை
ReplyDeleteவேலுச்சாமி பதிவைப்படித்தேன் மிகவும் நன்றாக இருந்தன நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு. இது காணக்கிடைக்காத ஒரு நூல்.நன்றி வாழ்க வளமுடன்.
ReplyDeleteஅருமையான தகவல்
ReplyDeleteமிக அருமையான கட்டுரை. நன்றி!!!
ReplyDeleteசந்துரு தோடை குலம், மண்ணரை
அருமையான தகவல் அடங்கிய பதிவு நன்றி நன்றி
ReplyDelete👌👏❤
ReplyDeleteVery good effort
ReplyDeleteSuperb and very informative.. thanks
ReplyDeleteSuper pangali
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteதோடை குலத்தை சேர்ந்தவர்கள் கருப்பு நிறத்தில் வண்டி வாங்கலாமா ?
தோடைக்கும் கருப்புக்கும் ஆகாது என்கிறார்கள்.
ரஞ்சித்சரண்- தோடை குலம்
ReplyDeleteஅருமை அருமையிலும் அறிந்ததில் பெருமை வையகம் போற்று கொங்கு நாட்டில் பண்டு தோட குலம் சிறந்து பெருமைசேர்த்து வருகிறது என்பதில் எத்தன பெருமையாகயிருக்கிறது தோடகுலத்தை பற்றி இதுவரை தெரியாமல் இப்பொழுது தெரிந்து அறிந்து கொண்டேன் இது ஒரு தேடினாலும் கிடைக்காத அறியபொக்கிஷமே வாழ்த்துக்கள்
ReplyDeleteOk
ReplyDeleteஅற்புதமான நமது குல வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு விளக்கி தெளிவாக விலக்கியமைக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்👍💐🙏
ReplyDeleteநன்றி
ReplyDelete