காணிப்பாடல் :
வாசமிகு காஞ்சிபார்ப் பதிகன்னி வாடியும்
வளர்காள மங்கைமுளசி
வல்லபெரு காகம் குழாநல்லி நசையனூர்
மணியனூர் ஓடைதகடை
ஆசைமிகு கொன்னையார் பரவுகற் றான்காணி
அழகுபெறு மோரூர்புகழ்
ஆலத்தூர்ப் பட்டணம் பெருகும்ஆ னங்கூரு
ஆகமார்க் கண்டன்வயதாம்
தேசமிகு கொங்கினில் பெரியநா யகிஅருள்
செயகால மும்விளங்கத்
திவ்யநவ மணிசுனைகள் சடைவன்னி கொன்றையும்
தேங்குதா லம்சிறப்பாய்
நேசமிகு கன்னந்தை குலஉசிதன் எனவந்த
நேமமிகு பச்சைபூபா
ஈன்றவர புத்திரன் செல்லப்ப பூபதி
நிலைமையென வருகாணியே!
காணியூர்கள் :
காஞ்சிக்கோயில், பாப்பினி, கன்னிவாடி, காளமங்கலம், முளசி, காகம், கொளாநல்லி,நசியனூர், மணியனூர், ஓடப்பள்ளி, தகடப்பாடி, கொன்னையாறு, கத்தாங்கண்ணி, மோரூர், ஆலத்தூப்பட்டணம், ஆனங்கூர் ஆகியவை கன்னந்தை குலக்காணியூர்கள்.
No comments:
Post a Comment